சர்வதேச ரி20 போட்டியில் சாமோ அணி சாதனை
சர்வதேச ரி20 போட்டிகளில் ஒரே ஓவரில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டு சாமோ அணி சாதனை படைத்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
உலகின் பல்வேறு பிராந்தியங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமோவின் தலைநகர் அபியாவில் வனாத்து அணிக்கு எதிரான போட்டியில் சாமோ அணி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
சாமோ அணியின் சாதனை
சாமோ அணியின் வீரர் டாரியுஸ் விஸ்ஸர் போட்டியின் 15ம் ஒவரில் ஆறு சிக்கஸ்ர்கள் அடித்து சாதனை படைத்தார்.
இந்த ஓவரை வீசிய வனாத்து பந்து வீச்சாளர் நாளின் நிப்பிகோ மூன்று சட்டவிரோத பந்துகளையும் வீசியிருந்தார்.
இதன்படி 15ம் ஓவரில் மொத்தமாக 39 ஓட்டங்களை சாமோ அணி பெற்றுக்கொண்டுள்ளது.
ரி20 சர்வதேச போட்டித் தொடரில் அணியொன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக இதுவரையில் 36 ஓட்டங்கள் என் சாதனை முறியடிக்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் சாமோ வீரர் விஸ்ஸர் 62 பந்துகளில் 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கைக்கு எதிரான போட்டி
2007ம் ஆண்டில் இந்திய அணியின் யுவராஜ் சிங் ஆறு சிக்கஸ்களை விளாசி ஒரே ஓவரில் 36 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் 2021ம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் கிரோன் பொல்லார்ட் 36 ஓட்டங்களையும், 2024ம் ஆண்டில் கட்டாருக்கு எதிரான போட்டியில் நேபாள வீரர் டிபேன்ட்ரா சிங் அய்ரீ 36 ஓட்டங்களையும், இந்த ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் நிக்கலோஸ் பூராண் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |