இலங்கை மற்றும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி - ஜனாதிபதியும் விளையாடலாம்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிக்கும் இடையில், கிரிக்கெட் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் இதற்கான அழைப்பை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாலைதீவில் போட்டியில் கலந்துக்கொள்வதற்காக புறப்பட்டுச் செல்ல உள்ளதுடன் இறுதியில் மாலைதீவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி இலங்கையில் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளது.
மாலைதீவு அணியில் அந்நாட்டின் ஜனாதிபதியும் விளையாடலாம் என மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
போட்டிகளுக்கான செலவுகளை இரு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கிரிக்கெட் போட்டிகள் அண்மைய தினம் ஒன்றில் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan