நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்யப்படும் ரஷ்ய இராணுவ வீரர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்
ரஷ்யா தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக,போரில் உயிரிழக்கும் இராணுவ வீரர்களை நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை ரஷ்யா உக்ரைனில் வைத்தே தகனம் செய்துவிடுவதாகவும் உக்ரைன் இராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் உக்ரைன் நகரமான Melitopolஇல் ஒரு நடமாடும் தகன வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த ரஷ்ய இராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகள் மூலம் அங்கு கொண்டு வரப்படுவதாகவும், அங்கு வைத்தே அந்த உடல்கள் தகனம் செய்யப்படுவதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
உள்ளூர் மக்கள் புகார்
அந்த தகன வாகனத்தில் தொடர்ந்து உடல்கள் தகனம் செய்யப்பட்டுக்கொண்டே இருப்பதால், எப்போதும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் பிணவாடை வீசிக்கொண்டே இருப்பதாக உள்ளூர் மக்கள் புகார் கூறுவதாகவும் உக்ரைன் இராணுவம் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் உயிரிழப்புகள் தொடர்வதாகவும் இழப்புகளை மறைப்பதற்காகவே ரஷ்யா இவ்வாறு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
