ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வு! பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கண்டியில் நாளை (30.06.2023) காலை 9.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிவிப்பு
குறித்த அரச நிகழ்வை கருத்திற்கொண்டே இந்த போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சாலையோரம் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு தூதுவர்கள் பயணிக்கும் வீதிகளில் வாகன சாரதிகளுக்கு வாகனங்களை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அரச வாகனங்களின் தொடரணிகள் நநடைபெறும் போது வாகன போக்குவரத்து தடைசெய்யப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிறப்பு போக்குவரத்து திட்டம்
அதன்படி, கீழ்வரும் பாதைகளில் சிறப்பு போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
• டி.எஸ்.சேனநாயக்க வீதி
• முனிசிபல் கவுன்சில் சந்திப்பிலிருந்து குயின்ஸ் ஹோட்டல் வரையிலான வீதி
• தலதா வீதி
• தலதா வீதியில் குயின்ஸ் ஹோட்டல் சந்தியில் இருந்து கொடுகொடல்ல சந்தி வரையான வீதி
• கொடுகொடெல்ல வீதியில் ராஜ வீதிய சந்தியிலிருந்து தலதா வீதி சந்தி வரையான வீதி
• கொடுகொடெல்ல வீதியில் உள்ள ராஜ வீதி சந்தியில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரையான பாதை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




