சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது: மகளிர் அமைச்சர் சாவித்திரி
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளதுடன் பிரிவினைவாதத்திற்கு இனி இடமில்லை என சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பில் நேற்று(14.02.2026) இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எல்லோருக்கும் பாகுபாடு இல்லாது நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இனவாதம்
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாம் 100 வீதம் சரி என சொல்லவில்லை. இன்னும் காலம் இருக்கிறது. அதனை செய்வோம்.பிரிவினைவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். அனைவரும் ஒன்றுமையாக வாழ முடியும்.

எதிர்கட்சியினர் தமது நோக்கத்தை முன்வைப்பதற்காக இனவாதம், பிரிவினைவாதம், மதவாதம் என்பவற்றை தூக்கி வருகிறார்கள். சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள்.
எதிர் கட்சியினர் எமது அரசாங்கத்தை விட நல்லதொரு திட்டத்தை முன்வைத்து நாட்டை ஆட்சி செய்ய முடியும் என்பதை கூறுங்கள். அப்படி வாருங்கள். இனவாதத்தை கையில் எடுக்க வேண்டாம் எனத் தொவித்தார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri