புதிய முதலீட்டு வாய்ப்புக்களை உருவாக்கவுள்ளதாக உறுதியளித்துள்ள ஜனாதிபதி : செய்திகளின் தொகுப்பு
புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி மக்களுக்கான தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் ஏற்படுத்தி அடுத்த சில வருடங்களுக்குள் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
திறந்த பொருளாதாரத்தில் முழுமையாகப் பயனடையும் வகையில் நாடு முழுவதும் புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்கி, தேசிய பொருளாதாரத்தை பத்து மடங்கு மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளோம், எனினும், எங்களின் வருமானம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு




