பிரித்தானிய கடற்கரை ஒன்றில் கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான நண்டுகள்
பிரித்தானியாவில் வடக்கு வேல்ஸிலுள்ள Aberffraw என்னுமிடத்தில் அமைந்துள்ள கடற்கரையில், ஆயிரக்கணக்கான இறந்த நண்டுகளின் ஓடுகள் கிடப்பதைக் கண்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதன்போது , ஆயிரக்கணக்கான spider crabs வகை நண்டுகளே கடற்கரையில் குவிந்து கிடந்துள்ளன.
இறந்த நண்டுகளின் ஓடுகள்
அத்துடன், இவ்வாறான நிகழ்வை கண்டு கவலைப்படவோ, பயப்படவோ அவசியம் இல்லை என Anglesey Sea Zoo என்னும் அமைப்பின் இயக்குநரான Frankie Hobro தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிகழ்வு நல்ல விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, நண்டுகள், இறால் மீன்கள் போன்ற உயிரினங்கள், வளர்ச்சியின் ஒரு பாகமாக தங்கள் உடலின் மேலுள்ள ஓட்டை அகற்றுவது வழமையான விடயம் என கூறியுள்ளார்.
எனவே, நண்டுகளின் ஓடுகள் கரை ஒதுங்கியுள்ளமையினால் அவை இறந்து விட்டதாக என எண்ணத் தேவையில்லை என்றும், ஆயிரக்கணக்கான நண்டுகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மற்றும் வளர்வதையே இது காட்டுவதாகவும் இது ஒரு நேர்மறையான விடயம் என Frankie Hobro குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
