எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவுடனான உடன்படிக்கைக்கு தயார்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலையில் எண்ணெய் தாங்கி பண்ணையின் அபிவிருத்திக்காக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
“டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட்” என்று அழைக்கப்படும், இது இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் சீனன்குடாவில் கட்டப்பட்ட 100 எண்ணெய் தொட்டிகளை எரிபொருள் நிரப்பும் நிலையமாக மேம்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்படுத்தலை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவுடன் ஒரு மாத காலப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இந்த உடன்படிக்கைக்கு எதிராக பல்வேறு மட்டத்திலும் எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வருகின்றன.
குறிப்பாக எாிபொருள் துறை தொழிற்சங்கங்கள், தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய முன்னிலை சோசலிஸக்கட்சியின் தேசிய அமைப்பாளர் புபுது ஜாகொட, இந்த உடன்படிக்கையை எதிர்க்க மக்கள் இயக்கம் ஒன்று உருவாக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
