கொக்குவிலில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை
கோவிட் பெருந் தொற்றுக்கான தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் நான்காவது தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
கொக்குவில் வளர்மதி சன சமூக நிலையத்தில் இன்று(13) காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அறிவிக்கப்பட்டுள்ளது.
பைசர் தடுப்பூசி
கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது தடுப்பூசியை பெற்று மூன்று மாத காலத்தை பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை மூன்றாவதாக பைசர் தடுப்பூசியை பெற்று மூன்று மாதத்தின் பின்னர் நான்காவதாக பைசர் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆவணங்கள்
தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விருப்புபவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்களாயினும் தமது தடுப்பூசி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் கொக்குவில் கிழக்கு சம்பியன் ஒழுங்கையிலுள்ள வளர்மதி சன சமூக நிலையத்துக்கு நாளை காலை வருமாறும் நல்லூர் பிரதேச வைத்திய அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் அறிவித்துள்ளார்.
இதேநேரம், குறிப்பிட்ட சில நாடுகளுக்கான உள்நுழைவுத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்காக அவசரமாக பைசர் தடுப்பூசியை பெற விரும்புபவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெற்ற நாளில் இருந்து ஒரு மாதத்தின் பின்னர் நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நல்லூர் பிரதேச
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.




