மரத்தில் இருந்து விழுந்தவனை முட்டும் மாட்டுக் கூட்டம்:ருவான் விஜேவர்தன
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதால், பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள சந்தர்ப்பத்தில் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதால், மக்கள் மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு முட்டிதற்கு மேலான கஷ்டங்களுக்கு உள்ளாகி இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடபெற்ற கட்சியின் இளைஞர் முன்னணியின் சந்திப்பில் ருவான் இதனை கூறியுள்ளார்.
அன்றாக பொருளாதார கொள்கையை பயன்படுத்தும் அரசாங்கம் காரணமாக மக்கள் நாளுக்கு நாள் கஷ்டங்களுக்கு உள்ளவதை தவிர வேறு தீர்வு இல்லை. மரத்தில் இருந்து விழுந்தவனை அரசாங்கம் என்ற மாட்டுக் கூட்டம் தொடர்ந்தும் முட்டி வருகிறது.
அரசாங்கத்தின் திட்டமிடாத வேலைகள் காரணமாக மக்கள் நாளுக்கு நாள் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பொருட்களின் விலைகள் நூல் அறுந்த பட்டம் போல் வியாபாரிகளுக்கு தேவையானபடி பறந்து உயர்ந்துக்கொண்டிருக்கின்றது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.