ஆதிவாசி தலைவர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
மரத்திலிருந்து வீழ்ந்தவனை மாடு மோதியது போன்ற நிலையில் இன்று மக்கள் இருக்கின்றார்கள் என இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகேலா எத்தோ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பொருட்களின் விலைகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
என்ன செய்வதற்கும் முதலில் மக்களை வாழ வைத்தாக வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரம் பற்றி பெரிதாக பேசப்படுகின்றது எனவும் எந்தப் பேச்சு எவ்வாறு இருந்தாலும் விவசாயிகள் தங்களது பயிர்ச் செய்கையை மேற்கொள்ள தேவையான உரம் எந்த வகையிலாவது கிடைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விவசாயம் செய்வதற்கு ஏதாவது ஓர் உர வகையை இறக்குமதி செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
