வடக்கு, கிழக்கில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கால்நடைகள்! நஷ்டஈடு வழங்குவது குறித்து அமைச்சரின் தகவல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்குவது தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், உயிரிழந்த கால்நடைகளுக்காக நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு
அண்மையில் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன.
சுமார் 1,800 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
