நாடு முழுவதும் கோவிட் தொற்று ஆபத்து வலயங்களாக அடையாளம்
நாடு முழுவதும் கோவிட் பெருந்தொற்று ஆபத்து வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவினால் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 14 நாட்கள் காலப் பகுதியில் நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் கோவிட் அதி ஆபத்து வலயங்களாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக கொழும்பு, கம்பஹா, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அதி ஆபத்து கொவிட் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள கொவிட் பரவுகை குறித்த இலங்கை வரைபடத்தின் அநேக பகுதிகள் சிகப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை கிரமமான அடிப்படையில் அதிகரிப்பினை பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், இந்த நோய்த் தொற்று உறுதியாளர்கள் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் உறுதியாகவில்லை என தொற்று நோய் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
