யாழ். பல்கலைக்கழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள், பணிபுரியும் ஊழியர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் தேசிய செயற்றிட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழகத்தில் கோவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டன.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் வழிகாட்டுதலில் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் வதியும் வெளியிடப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் இன்று தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டனர்.
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சினோபாஃர்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ். பல்கலைக்கழக சுகநல நிலைய வைத்திய அதிகாரி மருத்துவர் எஸ்.ராஜகுமார் (S. Rajakumar) தெரிவித்துள்ளார்.


ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri