கோவிட் - 19 தடுப்பூசி செயற்பட 14 தொடக்கம் 21 நாட்கள் ஆகும்! - பேராசிரியர் நீலிகா மாலவிகே
கோவிட் - 19 தடுப்பூசியினால் நோயெதிர்ப்பு அமைப்பு செயற்பட குறைந்தது 14 முதல் 21 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே இதனை தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 தடுப்பூசியில் உள்ள குறைபாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரின் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தடுப்பூசியும் உடனடியாக யாருடைய நோயெதிர்ப்பு சக்திக்கும் பதிலளிக்காது. இந்த செயல்முறைக்கு கோவிட் -19 தடுப்பூசியும் விதிவிலக்கல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கோவிட் - 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்ட சுமார் 2,000 சுகாதார ஊழியர்களின் இரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் இதுவரை சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam