ஒமிக்ரோனின் அறிகுறிகள் குறித்து இலங்கையில் வெளியான அறிவிப்பு
மாறுபட்ட அறிகுறிகளுடன் தென்னாபிரிக்க நாடுகளில் கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை நாடாளுமன்றில் வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே (Sudarshini Fernandopulle) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நோயின் பாரதூரத்தன்மை, மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் என்பன தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
சாதாரணமாக கோவிட் தொற்றின் போது, தொண்டை வலி ஏற்படுவதுடன், வாசனையை அறிய முடியாத நிலை காணப்படும். எனினும், இவற்றை விட மாறுபட்ட அறிகுறிகளுடன் தென்னாபிரிக்க நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளது.
என்ற போதும், சிகிச்சை முறைமை மற்றும் நோயாளர்களை முகாமைத்துவம் செய்யும் முறைமை என்பனவற்றில் மாற்றமில்லை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் முகக்கவசம் அணிதல், இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுதல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், பொதுமக்கள் ஒன்றுகூடியுள்ள இடங்களுக்கு அவசியமற்ற முறையில் செல்வதைத் தவிர்த்தல் என்பனவற்றுடன், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
