அமைச்சர்கள், அவர்களின் குடும்பங்களுக்கு கோவிட் தடுப்பூசி இரகசியமாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இரகசியமான முறையில் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட் தடுப்பூசியை வழங்குவதா காட்டிக்கொண்டாலும் அவர்களின் குடும்பங்களுக்கும் அது வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டில் வாழும் குடிமக்களின் இறுதியான நபருக்கு வழங்கப்படும் வரை நான் தடுப்பூசியை போட்டுக்கொள்ள போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.



