வவுனியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
வவுனியா மாவட்டத்தில் 105,582 நபர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசியும், 77,397 நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கோவிட் தடுப்பூசி ஏற்ற ஆரம்பித்த காலத்தில் இருந்து கடந்த 27ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலே இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 20 தொடக்கம் 29 வயதிற்கு உட்பட்டவர்களில் 21,744 நபர்கள் முதலாவது தடுப்பூசியினையும், 8062 நபர்கள் இரண்டாவது தடுப்பூசினையும் பெற்றுள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 83,838 நபர்கள் முதலாவது தடுப்பூசியினையும் 69,335 நபர்கள் இரண்டாவது தடுப்பூசினையும் பெற்றுள்ளனர்.
அத்துடன், தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதினால் மக்கள் அலட்சிய போக்காக
செயற்படாது சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி நடந்து கொள்ளுமாறும்
சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
