வவுனியா மாவட்டத்திற்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி தொடர்பில் வெளியான அறிவிப்பு
வவுனியா மாவட்டத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சுகாதாரப் பிரிவினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுக்கவுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட 98000 பேருக்கு தடுப்பூசிகள் வழங்க தீர்மானித்து கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி தொடக்கம் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட 83151 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நோய் தாக்கம் அதிகமாகவுள்ளமையால் அவர்களுக்கு முன்னுரிமையளித்து 5800 பேருக்கு நடமாடும் திட்டத்தின் மூலம் இராணுவத்தினர் ஊடாக தற்போது அவர்களுக்குரிய முதலாவது டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து முதலாவது டோஸ் சினோபாம் தடுப்பூசி பெற்றுக் கொண்ட 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் சினோபாம் தடுப்பூசிகளை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தங்கள் கிராம அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய உரிய திகதிகளில், குறிப்பிட்ட இடங்களில் அவற்றை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri