ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள உத்தரவு
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் பெருமளவானோருக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைத்துள்ளார்.
கோவிட் பரவும் ஆபத்து அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, ஜுலை மாதத்துக்குள் கிடைக்கும் தடுப்பூசிகளை அம்மக்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜுலை 11ஆம் திகதி கிடைக்கவிருக்கும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளை, கொழும்பு மாவட்டத்திற்கு 2 இலட்சம், கம்பஹாவிற்கு 5 இலட்சம், களுத்துறைக்கு 5 இலட்சம் என்ற அடிப்படையில ஒதுக்கீடு செய்து, இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர், மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,