புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் குறைந்தளவிலானவர்களே தடுப்பூசியைப் பெற்றுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்படும் நிலையங்களுக்குச் சென்று 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமக்கான முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் கோரியுள்ளனர்.
ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்ட சிறீசுப்பிரமணிய வித்தியாலயம், தேவிபுரம் வைத்தியசாலை, மூங்கிலாறு வைத்தியசாலை, பாரதிபுரம் பாடசாலை ஆகிய நிலையங்களில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23ஆம், 24ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகச் சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.





13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
