வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றல்
வவுனியா தாதியர் கல்லூரி தாதியர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இன்று (26.02) கோவிட் -19 தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்தியாவினால் வழங்கப்பட்ட கோவிட் -19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை செலுத்தும் பணிகள் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள தாதியர் கல்லூரி தாதியர்களுக்கான தடுப்பூசிகள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரால் ஏற்றப்பட்டன.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri