பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி! - ஜனாதிபதி அனுமதி
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
242,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறப்பது குறித்து ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோரும் தங்களது பிள்ளைகளை நம்பிக்கையுடன் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்பட்டால் இந்த மாத இறுதியளவில் பாடசாலைகளை திறப்பது பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
