நாட்டுக்கு வருகை தந்த முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவில் 3 பேருக்கு கொவிட்
நீண்ட இடைவெளியின் பின்னர் நாட்டுக்கு வருகை தந்த முதல் சுற்றுலாப் பயணிகள் குழுவில் மூன்று பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அண்மையில் உக்ரேய்னிலிருந்து இந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.
அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளிகள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ம் திகதி முதல் தொகுதி சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தந்திருந்தனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டை திறந்து விடும் நோக்கில் பரீட்சார்த்த அடிப்படையில் இவ்வாறு உக்ரேய்ன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி! 50 ஓவரில் 574 ஓட்டங்கள்..நொறுங்கிய ஜாம்பவானின் சாதனை News Lankasri
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri