முறிகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிய கோவிட் சிகிச்சை நிலையம்
முறிகண்டியில் புதிய கோவிட் 19 மருத்துவ நிலைய சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள முறிகண்டியில் குறித்த புதிய கோவிட் 19 சிகிச்சை நிலையம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 300 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது.
இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கோவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று முதல் பணிகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.
முறிகண்டியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றே இவ்வாறு கோவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது.
இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் ஆகியோர் குறித்த வைத்தியசாலையை பார்வையிட்டதுடன், பணிகளை ஆரம்பித்துள்ளனர்.







