பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கோவிட் தொற்று
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் வைரஸ் தொற்று வேகமாக பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர், சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகளையும் கொண்டு, இது சம்பந்தமாக பின்னறிவிப்பு மற்றும் ஆய்வு செய்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பின்னர் எடுக்க வேண்டிய தீர்மானங்களை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவி செயலாளர் நவீன் டி சொய்சா (Naveen D. Zoysa) தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கோவிட் தொற்று நோய் பரவல் அதிகரிப்பை காட்டுவதால், தொடர்ந்தும் பரவுவதை தடுக்க தேவையான முடிவுகளை தாமதமின்றி எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri