வவுனியாவில் 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்த 11 பேர் உட்பட 14 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா சந்தை உள்வட்ட வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுபவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளன.
அதில் 11 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியாவில மேலும் 14 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri