கோவிட் தொற்றாளர்கள் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கலாம் - விசேட வைத்திய நிபுணர் எச்சரிக்கை
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கோவிட் தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடத்தையை கட்டுப்படுத்துவதன் மூலம் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 9 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
