இலங்கையில் கோவிட்டின் பல திரிபுகளா? மூன்று நாட்களில் வெளியாகவுள்ள முடிவு
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவி வரும் கோவிட்டின் உருமாறிய திரிபு என்ன என்பதை கண்டுபிடிக்க ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் பரவி வருவது உருமாறிய ஒரு திரிபா அல்ல சில திரிபுகளா என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை குறித்த பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பரவி வருவது பிரித்தானியாவின் உருமாறிய திரிபு என கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது.
எனினும் நாட்டில் மேலும் சில திரிபுகள் பரவுகின்றதா என்பதை தற்போது முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று தினங்களில் இந்த ஆராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
