கொழும்பின் தெஹிவளை உள்ளிட்ட இரு பகுதிகளில் புதிய கோவிட் தொற்றுடன் அதிக தொற்றாளர்கள்
புதிய கோவிட் நோய்த் தொற்றுடன் அதிக தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை மற்றும் மிரிஹனவும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில் மொத்தம் 2,584 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த 2,584 பேரில் 429 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 429 பேரில் 51 பேர் தெஹிவளையை சேர்ந்தவர்கள், 30 பேர் மிரிஹனனயையச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீதமுள்ளவர்களில் பாதுக்கையில் 51, நவகமுவவில் 34, மொரட்டுவையில் 26, பம்பலப்பிட்டியில் 14 பேர் அடங்குவர் என தெரியவருகிறது.
கொழும்பு மாவட்டத்தைத் தவிர, கம்பாஹா மாவட்டத்தில் 415 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 356 பேரும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.