இறுக்கமடையும் பயணக்கட்டுப்பாடு - மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை
பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டங்களை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டினை மீறும் நபர்களை கைது செய்வதற்காக 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாடளாவிய ரீதியில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் பயணத் தடை, 19 மணித்தியாலங்களின் பின்னர் அன்றிரவு 11 மணிக்கு மீண்டும் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்கிணங்க அன்றைய தினம் இரவு 11 மணிக்கு நடைமுறைக்கு வரும் நாடளாவிய ரீதியிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 28ஆம் திகதி காலை 4 மணி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 423 பேர் 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டியில் 65 பேரும் மாத்தளையில் 98 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுவோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும்.
வீதித்தடைகள், நடமாடும் பொலிஸ் சுற்றிவளைப்பு, மோட்டார் சைக்கிள்களினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கூறியுள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...