மே இறுதி மற்றும் ஜூனில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காகும்: பேராசிரியர் மனோஜ் வீரசிங்க
இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது மே இறுதியிலும், ஜூன் மாதத்திலும் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என கொழும்பு மருத்துவப் பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
கோவிட் - 19 வைரஸ் வேகமாக பரவிய பல நாடுகளில் கடும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலமே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சுகாதார துறையினர் அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும், அது சம்பந்தமாக இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் மனோஜ் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காணப்படும் நிலைமையில் விரைவில் தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.