குறுகிய கால பொதுமுடக்கமொன்றை அமுல்படுத்த அரசு தயாராவதாக தகவல்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு கோவிட் வைரஸ் பரவியுள்ள நிலையில் பயண போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு அப்பால் குறுகிய கால பொதுமுடக்கமொன்றை அமுல்படுத்துவதற்கு அரசு உள்ளூர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரியவருகிறது என தமிழ் பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாட்டை விதித்துள்ள அரசு இன்னும் சில தினங்களில் மாவட்டங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்கவும் அதன் பின்னர் ஊரடங்கு சட்டத்தை பகுதியளவில் பிறப்பித்து பொது முடக்கமொன்றுக்கு செல்வதற்கும் தயாராகி வருவதாக அறியமுடிந்தது என அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோவிட் இரண்டாம் அலையினை கட்டுப்படுத்த முடியாமல் மலேசியா, மாலைதீவு ஆகிய நாடுகள் பொதுமுடக்கமொன்றை அறிவித்துள்ள நிலையில் இலங்கையும் அதேவகையிலான முடக்கத்திற்கு உடனடியாக செல்ல வேண்டுமென சுகாதாரத்துறை நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்த சூழ்நிலையில் அரசு இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
