ஒரு வாரத்திற்கு நாட்டை முடக்க ஆராய்கிறது அரசு
கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரு வார காலத்திற்கு முழுமையாக நாட்டை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக உயர்மட்ட தகவல்கள் மூலம் அறியமுடிந்ததாக தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தலைமையில் நேற்று அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போதே, நாட்டை முடக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, நாட்டை ஒருவார காலப்பகுதிக்கு முழுமையாக அல்லது 75 வீதம் முடக்குவதற்குத் தயாராகும் பட்சத்தில் அதற்குத் தேவையான தயார்ப்படுத்தல்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri