கோவிட்டிலிருந்து நாடு மீள வேண்டி வவுனியாவில் விசேட வழிபாடு
கோவிட் நோய் தாக்கத்தில் இருந்து இலங்கை மற்றும் உலக மக்களை பாதுகாக்க கோரி வவுனியா மடுக்கந்த சிறி தலதா விகாரையில் விசேட வழிபாடு இடம்பெற்றுள்ளது.
விகாராதிபதி மூவ அட்டகம ஆனந்த தேரர் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட வழிபாட்டில் நாடாமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், காதர் மஸ்தான் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலாளர் காஞ்சனகுமார, வன்னி பிரதிபொலிஸ்மா அதிபர் லால் செனவிரத்ன போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் குறைந்த அளவிலான பொது மக்கள் கலந்து கொண்டதோடு சமூக இடைவெளியும் பின்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முதலாம் இணைப்பு
இலங்கையில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றிலிருந்து நாடு மீண்டெழுந்து மக்கள் அனைவரும் சந்தோகமாக வாழ நாடு முழுவதும் சகல ஆலயங்களிலும் விசேட மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை நாட்டிலுள்ள சகல மதத் தலங்களிலும் வழிபாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் பல ஆலயங்களில் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் குட்செட்வீதி ஸ்ரீ கருமாரியம்மன் தேவஸ்தானத்திலும் இவ் மஹா மிருத்யுஞ்சய ஹோம பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
    
    
    
    
    
    
    
    
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam