இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் - நாட்டு மக்களுக்கு நிபுணர்கள் அவசர அறிவிப்பு
கோவிட் தொற்றுக்கு இலக்கானவர்கள் ஐவர்மெக்டின் மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும், ஐவர்மெக்டின் கோவிட் வைரஸிற்கு பலனளிக்க கூடியது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை.
இதனால் அந்த மருந்து பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோவிட்டை கட்டுப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் சிலர் ஐவர்மெக்டினை பரிந்துரை செய்கின்றனர். உள்நாட்டில் இந்த மருந்து குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.
ஆனால் இன்னமும் நாங்கள் இந்த மருந்தினை பரிந்துரைக்கவில்லை. ஐவர்மெக்டின் என்பது ஒட்டுண்ணி நோய் தொற்றுகளிற்கு சிசிச்சை அளிக்கின்ற மருந்து.
எனினும் கடந்த சில நாட்களில் மக்கள் அதிகளவில் இந்த மருந்தினை கொள்வனவு செய்வது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
சில மருத்துவர்கள் கோவிட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருந்தினை இறக்குமதி செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதாக தெரியவருகிறது.
இதனையடுத்தே மக்கள் இந்த மருந்தை கொள்வனவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த மருந்தினால் கோவிட்டை குணப்படுத்த முடியும் அல்லது தடுக்க முடியும் என ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்படும் வரை மக்கள் இந்த மருந்தினை தவிர்த்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுகின்ற (Tocilizumab) என்ற மருந்தை நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக் கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இந்த மருந்து கோவிட் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கு பொருத்தமான இரண்டாவது மருந்தாக உலக சுகாதார அமைப்பு (WHO) அங்கீகரித்துள்ளது.
இருப்பினும், இந்த Tocilizumab மருந்து கோவிட் நோய்க்காக தயாரிக்கப்பட்ட மருந்து அல்ல. இது மூட்டுவாதத்திற்காக தயாரிக்கப்பட்ட மருந்தாகும். அத்துடன், தற்போது கோவிட் நோயை தடுப்பதற்கு உள்ள ஒரு சிறந்த மருந்து தடுப்பூசியே.
ஒருவர் சளி இருமல் போன்றவற்றினால் பீடிக்கப்படுமிடத்து, அவர் கோவிட் தொற்றாளர் என யூகித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிறந்தது என்றும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
