காய்ச்சல், இருமல், தலைவலி, உடல்வலி உள்ளோருக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் முக்கிய அறிவிப்பு

Corona Virus Vavuniya Fever Covid - 19
By Independent Writer Aug 30, 2021 08:50 AM GMT
Report
156 Shares

காய்ச்சல், இருமல், தடிமன், தலைவலி, உடல்வலி உள்ளவர்களுக்கு வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்களில் யாருக்காவது காய்ச்சல், இருமல், தடிமன், தலைவலி, உடல்வலி என்பன இருப்பின் கோவிட் நோயாக இருக்க கூடுதலாக வாய்ப்புள்ளது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.

மழையில் நனைந்த சளிக்காய்ச்சல், ஐஸ்கிறீம் குடித்து வந்த காய்ச்சல், நிறைய வேலை செய்ததால் உடல் அலுப்பில் வந்த காய்ச்சல் என்று உங்களை நீங்களே ஏமாற்றுவதுடன் தயவு செய்து எங்களை தொடர்புகொண்டு என்ன மருந்து போடலாம் என கேட்காதீர்கள்.

நீங்கள் அலட்சியமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களிற்கு ஆபத்தானது என்பதை உணருங்கள். ஒரு சில நாளுக்கு முன் காலை 7 மணிக்கு PHI இடமிருந்து அழைப்பு, வீட்டில் 2 நாட்களாக காய்ச்சலுடன் இருந்த 60 வயதானவர் அதிகாலையில் மூச்செடுக்க சிரமப்பட்டு அவசர அம்பூலன்ஸை அழைப்பதற்கிடையில் மரணமாகிவிட்டார் என்று.

பின்பு, அவரது உடலை பொலுத்தீன் உறையிலிட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த நிலைமை??? கோவிட் தொற்றாளர்களில் அதிகமானவர்களிற்கு “Silent hypoxia” எனும் நிலைமை காணப்படுகின்றது.

அதாவது, அவர்களுக்கு மூச்செடுப்பதில் எந்தச்சிரமமும் இருக்காது ஆனால் அவர்களின் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவு சாதாரண அளவைவிட குறைவடைந்திருக்கும்.

இன்னும் சிலரில் “Covid speed” (Covid subclinical pneumonia with evidence of exertional desaturation) எனும் நிலைமை காணப்படுகின்றது. அதாவது அவர்களது குருதியில் ஒட்சிசனின் அளவு சாதாரண அளவில் இருக்கும்.

ஆனால் அவர்களது நுரையீரலில் நீர்கோர்த்தல் (pneumonia - நிமோனியா) ஆரம்பித்திருக்கும்.

இந்த இரு நிலைமைகளும் காணப்படுகின்றவர்களில், அவர்கள் சிறிய அளவிலான வேலை ஒன்றை செய்யும் போதே குருதியில் ஒட்சிசனின் அளவு சடுதியாக குறைவடைந்து உடனடியாக மயக்கம் ஏற்பட்டு சில நொடிகளில் மரணம் ஏற்பட வழிவகுக்கின்றது.

ஆனால், இந்த இரு நிலைகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அவர்களிற்கு சிகிச்சையளித்து காப்பாற்றக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் செய்யவேண்டியது என்ன…???

1. ஏதும் கோவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கோவிட் நோயாக இருக்கலாம் என்பதை முதலில் உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்குங்கள். கோவிட் யாருக்குமே வரலாம். தீண்டத்தகாத நோயோ அல்லது மறைக்கப்படவேண்டிய நோயோ அல்ல.

2. உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்குச்சென்று அன்ரிஜென் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள்.

3. அங்கு உங்களிற்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் வைத்தியர்கள் உங்கள் குருதியில் உள்ள ஓட்சிசனின் அளவை அளந்து அதனடிப்படையில் உங்களை வீட்டிற்கு அனுப்பி home based care இல் வைத்திருக்க முடியுமா அல்லது கோவிட் தடுப்பு நிலையம் (step down hospital) ஒன்றில் வைத்து உங்களை நாளாந்தம் அவதானிக்க வேண்டுமா அல்லது உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பார்கள்.

எனவே, தாமதிக்காதீர்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்கு நீங்களே வெட்டிக்கொள்ளும் சவக்கிடங்கு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US