களுபோவில வைத்தியசாலை கோவிட் பிரேதங்கள் - சமூக வலைத்தளத்தில் போலி படம் பதிவேற்றியவர் சிக்கினார்
களுபோவில வைத்தியசாலையில் கோவிட் பிரேதங்கள் ஆங்காங்கே கிடப்பதாக போலி படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொருவர் சிக்கியுள்ளார்.
வெளிநாடுகளில் கோவிட்டால் உயிரழந்தவர்களின் பிரேதங்கள் தொடர்பான படங்களையே இலங்கையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டு அவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதான நபர் என தெரியவருகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.