நாளாந்தம் நூற்றுக்கணக்கான மரணங்கள் - புதிய சுகாதார அமைச்சர், அமைச்சின் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
நாட்டில் முன்னெடுக்கப்படும் கோவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தில் குறைப்பாடுகள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைறவேற்றுக் குழு உறுப்பினரான வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுவே நாளாந்த மரணம் 200ஆக உயர்வடைவதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
புதிய சகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு நாங்கள் கூறிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்பாடுமாறு கோரி நிற்கின்றோம்.
அவ்வாறு செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க முடியாது போகும் எனவும் எச்சரித்துள்ளார்.
அத்துடன் குறைந்தது 90 வீத சமூக இடைவெளியையாவது பேண வேண்டும். இதனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள முடக்கத்தை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு பாதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
இன்னுமொரு அலை உருவாகாதவாறு நடந்து கொள்ளுங்கள் என்று மக்களை கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam