யாழில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி யாழ். நகரில் தேவையின்றி வெளியில் நடமாடுவோருக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
யாழ்.மாநகர சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நடமாடுவோரை பொலிஸார், இராணுவத்தினர் வழிமறித்து தகுந்த காரணமில்லாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 40ற்கும் மேற்பட்டவர்களுக்கு இப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடிக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
