குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 10 பேருக்குக் கோவிட் தொற்று
பேருவளை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் பணியாற்றும் குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் 10 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான அதிகாரிகள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த அதிகாரிகளுக்குப் பதிலாக ஏனைய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரையில் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
