எடுக்கப்பட்ட முடிவின் படி கடைகள் மூடப்பட்டதால் முடங்கிய பிரதேசம்
கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் முகமாக கொட்டகலை பிரதேசத்தில் உள்ள அனைத்து கடைகளையும் இன்று முதல் மூட கொட்டகலை பிரதேச சபை மற்றும் கொட்டகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு கொட்டகலையில் உள்ள அனைத்து கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசம் மக்கள் நடமாட்டம் இன்றி முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கொட்டகலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை மற்றும் நகரத்தில் பல கோவிட் இறப்புகள் பதிவானதை தொடர்ந்து கொட்டகலை பிரதேச சபை மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளன.
இந்த நிலையில் கொட்டகலை நகரத்தின் அனைத்து இடங்களையும் கிருமி நீக்கம் செய்து சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.













தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
