உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைத்தால் நாட்டில் முடக்கம் - வெளியாகியுள்ள தகவல்
நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்த உத்தியோகபூர்வ ஆலோசனை கிடைக்குமாயின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் முடக்க நிலையை அமுல்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் உத்தியோகபூர்வமான ஆலோசனை கிடைக்குமாயின், அதனை நடைமுறைப்படுத்த தாம் பின்நிற்கப் போவதில்லை.
எவ்வாறாயினும், கூலித்தொழிலை நம்பி இருக்கும் மக்கள் வாழ்வதற்கான முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறானதொரு தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில், அனைத்து விடயங்கள் குறித்து சிந்தித்தே, நாடு என்ற அடிப்படையில் தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan
