எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் நடைமுறை - அரசாங்கம் தீர்மானம்
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தங்களின் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் பயன்படுத்துகின்றனரா என்பது தொடர்பில் திடீர் சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த விடயத்தை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முறையற்ற வகையில் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து சேவையை இடைநிறுத்தும் அளவிற்கு வைரஸ் தாக்கம் காணப்படுகிறது.
அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால், அவர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே தொடர்ந்தும் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri