பத்து நாட்களில் 591 பேர் கோவிட் காரணமாக மரணம் - சுகாதார அமைச்சர்
கடந்த பத்து நாட்களில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 591 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களில் 21344 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோவிட் காரணமாக 18 வயதுக்கும் குறைந்த சிறார்கள் 14 பேர் மரணித்துள்ளனர் என பவித்ரா தெரிவித்துள்ளார்.
19 வயதுக்கும் குறைந்த 19688 சிறார்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன், 10 முதல் 18 வயதுக்கும் இடைப்பட்ட 26143 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
பிரித்தானிய கடற்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பல்: நிலைநிறுத்தப்படும் பிரிட்டிஷ் படைகள் News Lankasri