கோவிட் தொற்றுக்கு மத்தியில் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்ட பல தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாட்டில் COVID - 19 தொடர்பான விடயங்கள் மோசமாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தடுப்பூசி திட்டம் ஓரளவு தடைப் பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க முழு நாடும் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது உண்மையில் நியாயமற்றது.
இத்தகைய சூழ்நிலையில், சேவையை மிகச் சிறந்த முறையில் வழங்க சுகாதார அதிகாரிகள் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
COVID - 19 தொடர்பான சேவைகளில் இருந்து சுகாதார அதிகாரிகள் விலகியமை, நாட்டை பெரிதும் பாதிக்கும். நிலைமை மோசமடையக்கூடும்.
மேலும், இது சுகாதார சேவைக்கு அதிக சுமையை சேர்க்கும். எனவே, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், அவர்களின் பிரச்சினைகளை முறையாக தீர்க்க சுகாதார அமைச்சகம் அழைப்பு விடுப்பதாக ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள 14 தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி, பொது சேவைகள் ஐக்கிய செவிலியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்தே, மருத்துவம், பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் பிற இணைந்த தொழிற்சங்கங்களுக்கான கூட்டு சபை என்பன தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில், அதிகாரிகள் தங்கள் குறைகளை பூர்த்தி செய்யத் தவறினால் பணிநிறுத்த நடவடிக்கையைத் தொடர தயங்கபோவதில்லை என்று சுகாதார சேவை பரிசோதகர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரிய எச்சரித்துள்ளார்.
எனவே, ஏனைய தொழிற்சங்கங்களுக்காக செய்ததைப் போலவே தமது கோரிக்கைகளையும் பூர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கோருவதாக அவர் கேட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
