நாட்டில் இன்று முதல் புதிய விதிமுறைகள் - தொடர்ந்தும் சில தடைகள் நீடிப்பு
கோவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்குமென சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் படி இன்று முதல் ஜுலை 19ஆம் திகதிவரை கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ள அதேவேளை மத தலங்கள், விடுதிகள், திரையரங்குகள் என்பன திறப்பதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் சுகாதார வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி டெல்டா வைரஸ் பரவல் குறித்து கோவிட் - 19 செயலணி கூட்டத்தில் ஒரு நிலைப்பாட்டை எட்ட முன்னர் டெல்டா வைரஸ் சமூக பரவலாக மாறியிருக்கும், அது மட்டுமல்லாது அடுத்த 10 வாரங்களுக்கு கோவிட் - 19 வைரஸின் நான்காம் அலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
