டெல்டா மாறுபாடு நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம் - சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர்
டெல்டா மாறுபாடு நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொது சுகாதார பரிசோதகர்களால் கூறப்பட்ட படி நாட்டின் பல பகுதிகளுக்கு பரவியுள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூகம் மத்தியில் கொடிய மாறுபாடு பரவியுள்ளதா என்பதை அறிய சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையை சுகாதார அமைச்சு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் இது குறித்த மரபணு வரிசைமுறைகளை மேற்கொண்டு வருகிறது, விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.
இதற்கிடையில், தற்போது நாட்டில் கோவிட் - 19 தொற்றுக்கள் கீழ்நோக்கிய போக்கில் காணப்படுகிறது.
இருப்பினும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பது என்பது, மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் மற்றும் உருவாகி வரும் கொத்தணிகளைப் பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
