கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களுக்கு டெல்டா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம்
கொழும்பு, கொம்பனித்தெருவின் கட்டடத்தளக் கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் "டெல்டா" கோவிட் - 19 மாறுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் புதிய டெல்டா வைரஸால் முதலில் பாதிக்கப்பட்டவரின் நெருங்கியவர்களாக இருந்துள்ளதாக கொழும்பு மாநகர தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு தொழிலாளர்களும் ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவுகள் வரவிருப்பதாகவும் விஜயமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இருவரும் ஒரே மாதிரியான மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சோதனை முடிவுகள் வந்தவுடன் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும் இரண்டு தொழிலாளர்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்டுமான தளத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக விஜயமுனி தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 4 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
