டெல்டா பரவல் 70 வீதமாக அதிகரித்துள்ளது - விசேட மருத்துவ நிபுணர்
இலங்கையில் தற்போது கோவிட் வைரஸின் டெல்டா உருமாறிய வைரஸ் பரவல் 70 வீதமாக அதிகரித்துள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் சுஷி பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாது போனால், மீண்டும் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்த நேரிடும்.
அத்துடன் அடுத்த 8 வார காலங்களில் இலங்கையில் பிரதான கோவிட் வைரஸாக டெல்டா இருக்கும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் எனவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் சரியான முறையில் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால், மிகவும் பாரதூரமான நிலைமை ஏற்படும் எனவும் சுஷி பெரேரா எச்சரித்துள்ளார்.




